இலங்கைக்கு இந்தியா மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலரை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அவருடனான சந்திப்பையடுத்து, முன்னாள் நிதியமைச்சரினால் மேலும் ஒரு பில்லியன் டொலருக்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.