பாக்குநீர் கடல் வழியாக அகதிகளாக செல்வோரை தடுத்து நிறுத்துவதில் படையினர் தீவிரம்.

(வாஸ் கூஞ்ஞ)

இலங்கை நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னார் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்கும் முகமாக கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இலங்கை நாடு பூராகவும் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பெறமுடியாத நிலமை மற்றும் பொருட்களின் விலையேற்றம் அத்துடன் வருமானம் இன்மை போன்ற காரணத்தினால் மன்னார் பாக்குநீர் கடல் வழியாக இந்திய தமிழ் நாட்டுக்கு அகதிகளாக செல்வோர் ஆர்வம் காட்டி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனால் அரசுக்கு இராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் எற்படும் நிலமை உருவாகாமல் இருக்கும் நோக்குடன் மன்னார் பகுதியில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச் செல்வோரையும் போதைப் பொருட்கள் கடத்திச் வருவோரையும் தீவிரமாக கண்காணிப்பதிலும் அகதிகளாகச் செல்வோரை தடுத்து நிறுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அத்துடன் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோரை இனம் காட்டித் தருமாறும் மீனவ சமூகத்தையும் மற்றும் பொது மக்களையும் கடற்படையினர் நாடி நிற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.