ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களை பாப்பரசர் சந்திக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 35 இலங்கை குடும்பங்களின் உறவினர்கள் புனித பாப்பரசரை சந்திக்க வத்திக்கான் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் குடும்பங்களின் உறவினர்களுக்கு மே முதல் வாரத்தில் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரியவருகிறது.

35 பிரதிநிதிகள் இறந்தவர்களின் அனைத்து குடும்பங்களிலிருந்தும் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தூதுக்குழுவினர் பாப்பரசரைச் சந்தித்த மறுநாளே இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் பதுவா நகரில் பாரிய போராட்டமொன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.