GOTAவின் ஆட்சி இனிமேலும் வேண்டாம் நரக சுகம் அல்லவா…உயர் கல்வி நிறுவன மாணவர்களினால் திருமலையில் ஆர்ப்பாட்டம்.

(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் உயர் கல்வி நிறுவன மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது

ஆர்ப்பாட்டம் திருகோணமலை உயர் கல்வி நிறுவன மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (10) காலை இடம்பெற்றது

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஒரே ஒரு ஓடுல மக்கள் எல்லாம் ரோட்டில், அந்த ஒரே ஒரு பாட்டுல ஏமாந்தது மொட்டுல, டொலர் இல்ல நாட்டுல பெட்ரோல் இல்ல செட்டுல், பால்மா இல்ல வீட்டுல கரண்ட் இல்ல நைட்டில, பெண்கள் எல்லாம் வீட்டில ஆண்களெல்லாம் கேட்டில மற்றும் கேஸ் விலை கூடுது அது பாட்டுல பிள்ளைகள் எல்லாம் விறகு தேடுது காட்டுல என்ற கோஷங்களை எழுப்பியவாறு அரசுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னெடுத்திருந்தனர்

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாடசாலை புத்தகங்கள் பரீட்சை வினாத்தாள்களுக்கான காகிதம் எங்கே? சின்ன பிள்ளைங்க பாப்பாங்க போஜோ இந்த நாட்டுக்கு நீ தேவையில்லை நீ போ.. போ.. கல்வியையும் பொருளாதாரத்தையும் சீரழிக்கும் அடக்குமுறை, அதாரு அதாரு GOTA நீ ஒரு கோளாறு, சொத்து உரிமை பொறுப்பு 500க்கு ஒரு கிலோ பருப்பு, பயமா இருக்கா கோட்டா SIR இதுக்குப் பிறகு இன்னும் பயங்கரமா இருக்கும் SIR, GOTAவின் ஆட்சி இனிமேலும் வேண்டாம் நரக சுகம் அல்லவா… ஓட்டை போட்டு விட்டு நாட்டை விற்று விட்டோம்… பஞ்சம் இருக்கும் காரணத்தால் யாரும் இலங்கைக்கு வருவதில்லை மீறி அவன் இலங்கை வந்தால் கடைசி வரைக்கும் திரிவான் சிலிண்டர் உடன்…
என்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர் மேலும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வலுவூட்டும் முகமாக திருகோணமலை மாவட்ட பிக்குகள் பிக்குகள் குழு ஒன்று திருகோணமலை தலைமையக பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்து நடைபவணியாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து அரசுக்கு எதிரான குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.