76நூல்களுக்கு எழுதிய  முன்னுரைகளை உள்ளடக்கிய ஈழத்து நவீன இலக்கியங்கள் படைப்பாளர்கள் தடங்கள் நூல் வெளியீடு

பேராசிரியர் செ.யோகராசாவினால் 78நூல்களுக்கு எழுதிய  முன்னுரைகளை உள்ளடக்கிய ஈழத்து நவீன இலக்கியங்கள் படைப்பாளர்கள் தடங்கள் நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நூலுக்கான முதல் பிரதியை சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுள்ளதுடன், வெளியீட்டு உரையினை த.மேகராசா, நூல் மதிப்பிட்டுரையை எழுத்தாளர் எம்.அப்துல் றஸாக் நிகழ்த்தி உள்ளார்.

இந்நிகழ்வில்,  பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலமட்டத்தினரும் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

இந்நூலில் கவிதை, சிறுகதை திறனாய்வு,  கட்டுரை,  ஆய்வு,  பாடல்  போன்ற பல நூல்களின் முன்னுரைகள்  இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் எழுத்தாளர்களின் முதல் நூல்களின் முன்னுரைகளே அதிகம் இடம் பெற்றுள்ளன.