11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனைகள் அரசாங்க மற்றும் சுயேட்சை கட்சிகளின் பிரதிநிதிகளினால் நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கையளிக்கப்பட்ட 11 அம்ச தீர்மானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மைத்திரிபால சிறிசேன, 10 கட்சிகளின் சார்பில் வாசுதேவ நாணயக்கார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ,விஜயதாச ராஜபக்ச ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.