நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் ஆதரவளிப்போம் – கூட்டமைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியம் போன்ற பொதுக் கட்டமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமுடியாது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஆகவே வெகுவிரையில் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.