காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்துத் துறையினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காலி முகத்திடலில் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்ளும் தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.