திங்களும் நாடாளுமன்றை கூட்டுங்கள் – ரணில் கோரிக்கை

நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் நாடாளுமன்றம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.

அவரது இந்த கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.