பட்டினிச்சாவை நோக்கி நகர்கிறது இலங்கை தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் போராட்டம்.

(வாஸ் கூஞ்ஞ)

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசிற்கு எதிரான சனநாயக போராட்டம் அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கி பட்டினிச்சாவை நோக்கி நகர்கிறது அதிலும் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மின்சாரமின்மை என்பது பெரிதும் பாதிக்கின்றது என்பதை முன்னிருத்தி மன்னாரில் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.

வியாழக்கிழமை (07.04.2022) மன்னார் நகரில் நடைபெற்ற இவ் கண்டனப் போராட்டத்தின்போது மதத் தலைவர்கள் பொது மக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இவ் போராட்த்தின்போது கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிரான கருத்துக்கள் அமைந்த பதாதைகளை ஏந்தியவண்ணம் மன்னார் நகரில் அமைந்துள்ள ரவுன்ட போட்டை வலம் வந்து பின் இவர்கள் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நின்று இவ் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.