எருவில் தெற்கு கிராம வீதிகளுக்கு பெயர் பலகை பொருத்தப்பட்டது.

எருவில் தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர் பதாதை பொருத்தும் நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

எருவில் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் அனுசரணையில் அதன் ஸ்தாபகர் அ.வசிகரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நடப்பட்டது.

நிகழ்வுகளுக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.வசிகரன் அவர்கள் தலைமை தாங்க தவிசாளர் ஞா.யோகநாதன் மற்றும் செயலாளர் சா.அறிவழகன் பிரதேச சபை உறுப்பினர்களான சி.காண்டீபன், இ;வினோதினி, கண்ணகி அம்மன் ஆலய தலைவர் மா.சுந்தரலிங்கம், மற்றும் ஆலயங்களின், சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.