ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்புக்காக 09 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்கிய பொலிஸ் படை

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்புக்காக 09 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்கிய பொலிஸ் படையொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 5 ஏ.எஸ்.பி.க்கள் கொண்ட போலீஸ் படை, அலரிமாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று இரவு வரை அலரிமாளிகைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் மற்றும் அதன் அங்கத்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என பிரதமர் விடுத்த அறிவுறுத்தலின் பேரில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு தெற்கு மாவட்ட பொறுப்பதிகாரி சிசிர பெத்தாவின் தலைமையில் இது இடம்பெற்றுள்ளது. போராட்டங்களை அமைதியான முறையில் கலைக்க பொலிசார்    விசேட அதிரடிப்படைமற்றும் விமானப்படையின் உதவியினைப் பெற்றுள்ளது. பொதுச் சொத்துக்கள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.