திருமலை சிங்கள மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்….

(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை சிங்கள மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்

மத்திய மகா வித்தியாலய பிரதான வாயிலுக்கு முன்பாக நேற்று (04) பிற்பகல் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று இருந்தது

ஆர்ப்பாட்டத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நாடெங்கிலும் வெடிக்கும் போராட்டம் விலைவாசியை குறைக்குமாறும் ஆட்சி செய்யத் தெரியாவிட்டால் வீடு செல்லுமாறும் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த ஆசிரியர் ஒருவர்

திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களும் மீன்பிடியை நம்பி இருப்பவர்கள் இருக்கின்றனர் மேலும் அரசு அதிகாரிகள் என்ற வகையில் எமக்கு வழங்கப்படுகின்ற சம்பளமானது தற்போதைய காலகட்டத்தில் எழுந்துள்ள விலைவாசி மற்றும் பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிப்பை செலுத்தி உள்ளதாகவும் இதற்கான உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்குமாறும் மக்கள் நாடெங்கும் போராட்டம் என்ற வகையில் வீதிக்கு இறங்கி உள்ள நிலையில் மக்களை ஏமாற்றும் விதத்தில் அதே அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களை பதவி நீக்கு அதை அமைச்சர்களுக்கு புதிதாக அமைச்சுப் பதவிகளை வழங்கியமை மக்களை ஏமாற்றுகின்ற செயல் எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்

மேலும் இவ்வாறான செயற்பாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அரசியல் அறியாமை தன்மையை மேலும் உறுதி செய்துள்ளதாகவும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் வீடு செல்லுமாறும் இதன்போது வேண்டிக்கொண்டனர்.