அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை.ராஜபக்ச குடும்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் பதவிகளை ஏற்கப் போவதில்லை என்று கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையின் கீழ் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக் கொள்வதில்லை என தனிப்பட்ட தீர்மானங்களை குழு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.