சபைத் தலைவராக தினேஷ் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன்?

சபைத் தலைவராக தினேஷ் குணவர்தனவும், அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்துள்ளனர்.

இந்த இரண்டு பதவிகளும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை  வழிநடத்துவதில் மிகவும் முக்கியமானவை என்பதால் அதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெறும் ஆளுங்கட்சிக் குழுக் கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.