பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் பலாலி வீதி வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நகர்கின்றது!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு கோரியே பல்கலைகழகம் முன்பாக இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த போராட்டம் தற்போது பலாலி வீதி வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நகர்வதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.