நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய தேசிய நெருக்கடிகளுக்குத் தீர்வுக்காணும் முகமாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து அரசியல் கட்சிகளையும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டு தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் காரணமாகவே தற்போதைய தேசிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்கான தேசிய முயற்சியாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.