ஜனாதிபதியிடம் கையளிக்கப்படாததால் அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் சட்டபூர்வமானவை அல்ல – சாலிய பீரிஸ்

அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடமே கையளிக்கவேண்டும் என சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்

மேலும் அவ்வாறு இல்லாவிட்டால் அந்த இராஜினாமா கடிதங்கள் சட்டபூர்வமானவை அல்ல என குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும்போதே அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டனர் என கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும் எனினும் இந்த இராஜினாமா கடிதங்கள் சட்டபூர்வமானவையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் என்ன நடக்கின்றது என்பதை மக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு உள்ளதாக தெரிவித்த அவர்,
தங்களாலும் நாட்டினாலும் பொருளாதாரத்தினாலும் இந்த நிச்சயமற்ற நிலையை தாங்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.