அவசரகாலத்தை, அவசரமாக மீளப் பெற வலியுறுத்தல்!

அவசரகால சட்டத்தை, அவசரகால நிலைப் பிரகடனத்தை அவசரமாக மீளப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தரணிகள் சங்ககத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரம், வெளியீட்டு சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் உட்பட கருத்து சுதந்திரம் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் இறையாண்மையின் அம்சங்கள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அரசோ அல்லது அதன் முகவர்களாலேயோ பாதிக்க இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.