அதி விசேட வர்த்தமானி மூலம் அவசரகாலச் சட்டம் பிரகடனம்!

அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ பிரகடனப்படுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவும் நிலைமை, பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பேணுதல், சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை இந்தப் பிரகடனம் மூலம் வெகுஜனப் போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.