புதிய மாணவர்கள் அனுமதியும் பரிசளிப்பு விழாவும்.!

(ஹஸ்பர்)

திருகோணமலை அல் அமான் பாலர் பாடசாலையின் 2022ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் புதிய மாணவர்கள் அனுமதிக்கும் நிகழ்வும் பாலர் பாடசாலை ஆசிரியரியை சித்தி ரசீதா பௌமி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகம்மட் நௌபர், கௌரவ விருந்தினராக பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் அமுதியா
சிறப்பு விருந்தினராக விபுலானந்த கல்லூரி ஆசிரியை கதீஜா, பாலையூற்று சமுர்த்தி உத்தியோகத்தர் சத்திய சீலன் மற்றும் பெற்றார்கள் நலன்விரும்பிகள் மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.