(வாஸ் கூஞ்ஞ)
அரசின் திட்டத்துக்கமைய 22 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு முழு நாட்டினையும் உள்ளடக்கும் வகையில் செயற்படுத்தப்படும் ‘ஹரிக் தெயக்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கைத் திட்டம் 29.03.2022 அன்று முற்பகல் இங்கு சுபவேளையில் இலங்கை பூராகவும் நடைபெற்றது.
அதற்கமைய மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றின் வீட்டுத்தோட்டம் ஒன்றில் பிரதான சமாரம்ப வேலைத்திட்டத்துக்கு அமைய மன்னார் பிரதேச செயலக் பிரிவில் பேசாலை வடக்கு கிராம அலவலகப் பிரிவில் பேசாலை பகுதியில் சேதன பசளையின் மூலம் பரந்தளவிலான நீண்டகால வீட்டுத்தோட்ட செய்கையாளர் திரு அல்போன்ஸ் பீரீஸ் அவர்களால் சமூர்த்தித் திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நாற்று மேடை தோட்டப்பகுதியில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்வின்போது மன்னார் மாவட்ட குறுநிதி திட்ட சமூர்த்தி முகாமையாளர் ரி.ஏ.திலக் பெனாண்டோ, மன்னார் பிரதேச செயலக பிரிவில் மன்னார் வடக்கு சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.கார்த்திக்கா பேசாலை வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஆர்.ஆனந்தஜோதி கூஞ்ஞ பேசாலை வடக்கு கிராம அலுவலகர் வேர்ஜினி மற்றும் பேசாலை சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி ஜெ.யஸ்மினி டயஸ் உட்பட பயனாளிகள் பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வின்போது வீட்டத்தோட்டத்தில் ஆர்வம் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தலா 40 வீட்டுத்தோட்ட கன்றுகள் வழங்கப்பட்டன