நாவிதன்வெளியில் “பசுமையான தேசம்” ஜனாதிபதி தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

( ஏ.எல்.எம்.ஷினாஸ் )

அதிமேதகு ஜனாதிபதியின் தேசிய கொள்கை மற்றும் சுபீட்சத்தின் நோக்கம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள “பசுமையான தேசம் ” தேசிய வீட்டுத்தோட்ட பயிர் செய்கை புரட்சி வேலை திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (29) நாவிதன்வெளியில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் அமரதாச ஆனந்த, உப தவிசாளர் ஏ.கே அப்துல் சமட், உதவிப் பிரதேச செயலாளர் பி. பிரணவ ரூபன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம், சமுர்த்தி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நஞ்சுத் தன்மையற்ற உணவு வகைகளை வீட்டுச் சூழலில் உற்பத்தி செய்யும் தேசிய வேலை திட்டத்திற்கு அமைய புதிய மரக்கறி வகைகள், பழ வகைகள், கீரை மற்றும் கிழங்கு வகைகள் உள்ளிட்ட பயிர்களை தத்தமது வீட்டுத்தோட்டத்தில் இருந்து பெற்று தமது நுகர்வு தேவைகளை பூர்த்தி செய்து வீட்டுக் கூறுகளின் நாளாந்த செலவுகளை குறைத்து மேலதிக வருமானத்தை அதிகரிக்கச் செய்து நோயற்ற போசனையான குடும்பங்களை உருவாக்குவதே இந்த தேசிய வேலைத்திட்டத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள 20 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.