முதலாவது சௌபாக்கியா வார வேலைத்திட்டத்தின் மூலம் காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

(அஸ்ஹர் இப்றாஹிம்)

சௌபாக்கியா வாரம் நாடு பூராகவும் 24/03/2022 தொடக்கம் 31/03/2022 வரை அனுஸ்டிக்கப்படுகின்றது. மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனுகரிகளுக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.கே.உதயகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.தமிழ்வாணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட திருமதி.வசுமதி கேசகபிள்ளை , திருமதி.ஜெயராணி புஸ்பராசா , திரு.கதிரவேலு சிறிகாந்தன் ஆகியோருக்கும் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.