வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் தொழில் சந்தை

(ஹஸ்பர்)

தம்பலகாமம் பிரதேச செயலகமும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து நடாத்திய வெளிநாடு செல்பவர்களுக்கான தொழில் சந்தை நேற்று (24) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க நடைபெற்ற தொழில் சந்தையில் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலகுவாக செல்வதற்கான வழி முறைகள் தொடர்பிலும் இதன் போது தெளிவூட்டப்பட்டது. போலி முகவர்களிடமிருந்து ஏமாறாமல் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக பதிவு செய்து செல்வதன் சாதகம் தொடர்பிலும் இதன் போது வளவாளராக கலந்து கொண்ட பணியகத்தின் திருகோணமலை பொறுப்பதிகாரி ஹமால் தெளிவூட்டினார்.

குறித்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிநாடு செல்லவுள்ள பயனாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.