மன்னாரில் சுற்று சூழலை நோக்காது முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் மன்னார் தீவை அழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. புவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டம் இப்பொழுது பல்வேறு பகுதிகளில் சூழல் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றது. மக்கள் குடியிருக்கும் அன்மித்த பகுதியிலும் கரையோர மீன்வளம் கொண்ட இடத்திலும் காற்றாலை நிர்மானிக்கப்பட்டமை கனியவள மணல் அகழ்வு மற்றும் மன்னார் தீவில் நகரில் திட்டமிடாத தன்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான பணிகளால் பாதிப்புக்கள் உள்ளாகும் நிலை தோன்றியுள்ளன என யாழ் பல்கலைக்கழக புவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் மன்னார் இணைப்பாளர் யூட்சன் பிகிராடோ அவர்களின் ஏற்பாட்டில் பூகோள மற்றும் பிராந்தியங்களுக்கான காலநிலை மாற்றமும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பிலும் மன்னாரில் நிலவுகின்ற கனியவள மணல் அகழ்வும் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மற்றும் இப்பகுதிக்கு கால்த்துக்கு காலம் வந்து செல்லும் வரிசைப் பறவைகள் தொடர்பான நன்மை தீமைகள் பற்றி உரையாற்றுவதற்காக யாழ் பல்கலைக்கழக புவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வளவாளராக மன்னாருக்கு வந்திருந்தபோது இவர் மன்னார் சூழல் தொடர்பாக தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டம் இப்பொழுது பல்வேறு பகுதிகளில் சூழல் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றது.

அந்த அடிப்படையில் காலநிலை மாற்றம் பெரும் மாற்றத்தை மன்னார் மாவட்டத்துக்கு ஏற்படுத்தி வருகின்றது.

இந்த காலநிலை மாற்றத்தின் விளைவாக மன்னார் மாவட்டத்தில் வருடாந்த மழை வீழ்ச்சி மாறுபாடாக காணப்படும் அதேசமயம் வெப்ப நிலையிலும் தலம்பல் காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தின் ஈரளிப்பற்ற அளவும் அதிகரித்து வருகின்றது. இவ் மாவட்டத்தின் மனித மற்றும் சட்டவிரோத செயல்பாட்டின் விளைவாக காலநிலை பாதிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

கடந்த தசாப்தத்தோடு ஒப்பிடும்போது இன்றைய தசாப்தத்தில் மன்னாரின் மழை வீழ்ச்சியில் தலம்பல் நிலை மாறுதல்கள் காணப்படுகின்றது.

இங்கு மழை வீழ்ச்சியில் அதிகரிப்பு கூடியிருந்தாலும் இடை ரீதியாகவோ அல்லது காலநிலையோ அவைகள் ஒருநிலையில் காணப்படவில்லை.

அத்துடன் மழை வீழ்ச்சி அதிகரித்து வரும் அதேசமயம் மன்னார் மாவட்டத்தில் மழை கிடைக்கின்ற நாட்கள் கனிசமான அளவு குறைந்து வருகின்றது.

ஆகக்கூடிய மழை வீழ்ச்சி மிக குறைந்த நாட்களில் கிடைப்பதன் விளைவாக ஏற்கனவே தாழ்நிலமாக காணப்படுகின்ற மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ச்சியாக அல்லது அதிகமான மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2019அம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆண்டுதோறும் மன்னாரின் மழை வீழ்ச்சி சராசரி 22 சத வீதமாக அதிகரித்து காணப்படுகின்றது.

குறிப்பாக பருவ மழை வீழ்ச்சி காலத்தில் ஏற்படும் இவ் மழை வீழ்ச்சி மன்னார் மாவட்டத்தில் இடம்பெரும் பல்வேறுபட்ட பயிர்ச் செய்கைகளை கனிசமாக பாதித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்தோடு பல்வேறுபட்ட மானிட செயற்பாடுகள் அதாவது மனித நடவடிக்கைகள் மன்னார் மாவட்டத்தில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றங்கள் பாதிப்புக்களையும் அதன் தன்மைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.

மன்னார் மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் குறிப்பாக மறிச்சிக்கட்டி பகுதிகளில் ஏற்பட்டுவரும் காடழிப்பு காரணமாக மன்னார் மாவட்டத்தின் இயற்கை சூழல் மிகவும் பாதிப்படைந்து வருகின்றது.

இந்த காடழிப்பானது மன்னார் மாவட்டத்தின் இயற்கை சூழலின் மிகப் பாதிப்பாகக் காணப்படுகின்றது இதனால் இங்குள்ள மழை வீழ்ச்சி வெப்பநிலை போன்றவற்றால் பல்வேறுபட்ட சௌகரிய பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.

மன்னார் பகுதியின் நகரப்பகுதியில் குறிப்பாக மன்னார் வர்த்தக நடுப்பகுதிகளில் மற்றும் அண்மித்த பகுதிகளில் ஏற்படுகின்ற கட்டுமானங்களின் அதிகரிப்பு காரணமாகவும் வீதி அபிவிருத்தியின் செயற்பாடு காரணமாகவும் மன்னாரில் காலநிலையிலும் மாற்றங்கள் எற்பட்டு வருகின்றன.

இதனால் நகரப்பகுதியில் வெப்பநிலையும் அதிகரிப்பாக காணப்படுகின்றது. குறிப்பாக பகல் பொழுதில் மட்டுமல்ல இரவிலும் இவ் வெப்பநிலை கனிசமான பாதிப்புக்களை உண்டுபண்ணி வருகின்றது.

இதற்கப்பால் மன்னாரில் உருவாக்கப்பட்டு வருகின்ற காற்றாலை செயற்பாட்டினாலும் மன்னாரில் இவை அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பல பிரச்சனைகளை உண்டுபண்ணி வருகின்றது.

குறிப்பாக புதிப்பிக்கப்படும் சக்தியின் ஒரு பகுதியாக காற்றாலை அமைகின்றது. காற்றானது இயற்கையாக இங்கு தொடர்ச்சியாக கிடைக்கும் ஒரு மூலப்பொருளாக காணப்படுகின்றது.

ஆகவே காற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இயற்கை மின்சாரமானது ஒப்பிட்ட ரீதியில் ஏனைய மின்சார உற்பத்தியோடு ஒப்பிடுகையில் கனிசமான அளவு நன்மை பயக்கின்ற அதேசமயம் பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் ஒரு செயல் திட்டமென்றும் கூறலாம்.

இருந்தாலும் காற்றாலையானது மன்னார் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டிருப்பது பல பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக காற்றாலை ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு அன்மையில் அதிகளவான ஆவியுர்ப்பு செயற்பாட்டின் விளைவாக பயிர் செய்கைகள் பாதிப்படைகின்றன.

இரண்டாவது காற்றாலை அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு அன்மையில் உள்ள தரைக்கு கீழ் உள்ள நீர்வளம் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலை எற்படுகின்றது.

மூன்றாவது காற்றாலை மின்சாரத்துக்கான காற்றாலைகள சுழல்வதின் காரணமாக குறிப்பாக இரவு பகுதிகளில் வெளிவரும் சத்தம் மன அழுத்தத்தை அல்லது அசௌரியத்தை ஏற்படுத்துகின்ற நிலையும் உள்ளாகின்றது.

இதற்கப்பால் காற்றாலை அமைக்கப்படுகின்ற பல பகுதிகளில் மன்னாரில் இயற்கை வளம் என வர்ணிக்கப்படுகின்ற பறவைகள் வந்து செல்லும் பாதையானது எதிர்காலத்தில் இங்கு வந்து செல்லும் வரிசைப் பறவைகளின் நகர்வுகளுக்கு அதன் ஏனைய செயற்பாடுகளும் மிகப் பெரிய தடையாக அமையும் என்பது ஐயமில்லை.

குறிப்பாக மன்னார் தீவிலுள்ள தெற்குப் பகுதியில் கடற்கiயோரமாக அமைக்கப்படுகின்ற காற்றாலைகள் இந்த வரிசைப் பறவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டு

பொருளாதாரம் மற்றும் சூழல் பாதிப்புக்கள் இருந்தாலும் கூட காற்றாலைகள் அமைக்கப்ப்டும் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

உலகத்தில் பல இடங்களில் காற்றாலை மின்சாரம் அமைக்கப்பட்டு இருப்பது உண்மை ஆனால் அவைகள் மக்களுக்கு மற்றும் சூழலுக்க பாதிப்பு ஏற்படா தன்மையில் நவீன தொழில்நுற்ப அடிப்படையில் அவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக காற்று அதிகமாக வீசும் இடங்களிலும் மக்கள் வாழும் இடங்கள் அற்ற இடத்தில் இவைகள் அமைக்கப்படும்பொழுது எவ்வித பாதிப்புக்களையும் உண்டுபண்ணப் போவதில்லை.

ஆனால் அதிகளவான மீன்பிடி அமையும் இடங்களில் கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்படும் இவ் காற்றாலை செயற்திட்டத்தின் அமைவாக இவ் காற்றாலைகளின் காத்தாடி சுழற்சி சத்தம் காரணமாக கரையோரத்துக்கு வரும் மீனகள் வருவது தடைப்பட்டு கரவலை மற்றும் கரையோர மீன்பிடி தொழில் பாதிப்படையும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

இலங்கையில் புத்தளம் கற்பிட்டி பகுதிகளில் அமைக்க்பட்டுள்ள காற்றாலை மின்சார செயற்திட்டம் மக்கள் மிக குறைவாக இருக்கும் இடத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மன்னாரைப் பொருத்தமட்டில் காற்றாலை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளபோதும் அத்துடன் செயல்படுத்தப்பட இருக்கின்றபோதும் இங்கு அண்மையில் குடியிருப்போரும் அதிகமாக மீன்பிடி இடமாக இருப்பதாலும் வரிசைப்பறவைகள் காலத்துக்கு காலம் வந்து செல்லும் இடமாக இருப்பதாலும் இவ் காற்றாலைகளால் மன்னார் பகுதி பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது வெளிச்சமாக காணப்படுகின்றது என இவ்வாறு தெரிவித்தார்.