எரிவாயு நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களின் உரிமையாளர்கள்!

எரிவாயு நெருக்கடி காரணமாக உணவகங்களை வியாபாரத்திற்காக திறப்பது நெருக்கடியாக மாறியுள்ளது என உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதனால் தங்களது வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க அனுரகுமார தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, நகரங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது