நிதியமைச்சரை நீக்குவது குறித்து நேற்று ஆளும்கட்சி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதா?

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நேற்று இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஆளும் தரப்பின் விசேட கூட்டம் இடம்பெற்றது.

நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவில்லை என்றும் மாறாக அவரது நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன என்றும் டி.பி. ஹேரத் தெரிவித்தார்.

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது என ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த சந்திப்பில் எவ்வித சூடான விவாதமும் இடம்பெறவில்லை என்றும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.