பெப்ரவரி மாதம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளாத தமிழ் தலைவர்கள்

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஒருமுறை கூட கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மாதத்தில் ஒருமுறை கூட கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அடங்குகின்றனர்.