இலங்கை வங்கி ஏற்பாட்டில் தேசிய மகளிர் தினக் கொண்டாட்டமும் வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் மரக்கறி விதைகள் நன்கொடை நிகழ்வும்

(ரவ்பீக் பாயிஸ்)

இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய மகளிர் தின நிகழ்வும் வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் மற்றும் மரக்கறி விதைகள் நன்கொடை வழங்கும் நிகழ்வும் திருகோணமலையில் இடம்பெற்றது

திருகோணமலையில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று (22) இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் என்.டி.ரகுராம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

என் உலகம் என் வழியில் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான குறித்த தேசிய மகளிர் தின நிகழ்வு உப்புவெளி மற்றும் கப்பல்துறை விவசாய போதனாசிரியர் பிரிவில் 50க்கும் மேற்பட்ட பெண் பயனாளிகளை உள்ளடக்கியதாக நிகழ்வு இடம்பெற்றது

குறித்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் மற்றும் மரக்கறி விதைகள் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் வீட்டுத்தோட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்றும் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை வங்கியின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன்,இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் சந்திக்க டி சில்வா, இலங்கை வங்கியின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் எ.பிரதீபன்,இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம் மற்றும் விவசாய போதனாசிரியர் ஜனாப் ஜே. ஜே. ஜேசாட் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.