சமூக பாதுகாப்புச் சபை கௌரவிப்பு நிகழ்வு

(ஹஸ்பர்)

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் தேசிய அடைவு மட்ட வெற்றியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நேற்று (21) மாலை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 16 உத்தியோகத்தர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டார்.