35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது !

35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

500 மில்லியன் டொலர் இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த டீசல் கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இறக்கும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.