பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசிக்கு தட்டுப்பாடு – பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் மாற்றம்!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ஏனைய பொருள்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 6ஆம், 7ஆம், 8ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, 4ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சைத் திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது