தற்போதைய டொலர் நெருக்கடியில் இருந்து உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பு

(ஹஸ்பர்)

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடியை உள்ளுர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்,
இன்று நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவுகிறது.இதை மறைப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் இந்த டொலர் நெருக்கடியை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். வெளிநாட்டு பொருட்களை நம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய எவ்வளவோ டொலர்களை செலவழித்துள்ளோம். இதன் விளைவாக, எங்கள் உள்ளூர் தயாரிப்புகள் பல வீழ்ச்சி கண்டன.
என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் நாட்டு பழ மரங்கள் அழுகும் போது, வெளி நாடுகளில் இருந்து வரும் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் விளையும் பச்சைப்பயறு மற்றும் கௌபியை விற்க முடியாமல், சேனை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். அப்படி இருந்தும் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.இப்போதே இந்த முறையை நிறுத்திவிட்டு, இந்த டொலர் நெருக்கடியை நமது உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.