சில மருந்துகளின் விலைகளில் மாற்றம்!

சில மருந்துகளின் விலைகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கண்காணிப்பு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தேசிய மருந்து நெறிப்படுத்தல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.