தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் அறிவு ரீதியிலான பரம்பலை விருத்தி செய்வதற்கு ஒரு அச்சானியாக செயற்படுவேன் – உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்

( றம்ஸீன் முஹம்மட்)

தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் அறிவு ரீதியிலான பரம்பலை மேலும் விருத்தி செய்வதற்கு ஒரு அச்சானியாக செயற்படுவேன் என உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

வாசிப்பு ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சி மற்றும் பிரபல அறிஞர்களின் நூல்கள் பற்றிய ஆய்வு நூலக மண்டபத்தில் அண்மையில் நூலகர் எம்.எம்.ரிபாயுடீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறிஞர் சித்திலெப்பை இலங்கையில் தோன்றிய மிக முக்கியமான முஸ்லிம் சமூகத்துடைய அறிஞர் அது மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகத்தை கல்வி சமூகமாக, அரசியல் பொருளாதார ரீதியில், சமூக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான முக்கிய பாத்திரங்களில் கருதப்படுபவர் புத்திஜீவி அறிஞர் சித்திலெப்பை ஆகும்.

மேலும் 19ஆம் நூற்றாண்டில் புடம் போட்டுக் கொண்டு வந்த முஸ்லிம் புத்திஜீவியாக அறிஞர் சித்திலெப்பை இருக்கிறார். இந்த ஆய்வு மிக கனதியானது என்றும், இப்படியான ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் அதிகமாக நடக்க வேண்டும்.

எமது பல்கலைக்கழகம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைந்து மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றை எதிர்வரும் வாரம் நடாத்த இருக்கிறோம். அந்த வகையில் இவ்வாறான செயற்பாடுகள் தான் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக நடக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

நான் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்திலே கற்றுக்கொண்டு இருக்கும்போது, அங்கே ஒவ்வொரு திணைக்களங்களிலும் வாராவாரம் ஏதாவது ஒரு தலைப்பில் பயிற்சி பட்டறை இடம்பெறும். உலகத்தில் எல்லா பாகங்களிலும் இருந்து ஒவ்வொரு தலைப்புகளில் நடைபெற்றும், ஆகவே எமது பல்கலைகழகத்திலும் இப்படியான குறிப்பிட்ட துறையில் பல்கலைக் கழகத்திலுள்ள புத்திஜீவிகளை அழைத்து, அரசியல், நாட்டின் பொருளாதார முறைமை, சமூக விவகாரங்கள் மற்றும் சுகாதாரம் ஆரோக்கியம் பற்றி ஏதாவது தலைப்புகளில் பல்கலைக்கழகத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் இருக்கிறார்கள் இவர்களை அழைத்து பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு இப்படியான பயிற்சி பட்டறைகள் நடத்த வேண்டும், நூலகம் சம்மந்தப்பட்ட பயிற்சியை தவிர இனிவரும் காலங்களில், கல்வி சம்பந்தப்பட்ட பயிற்சி பட்டறை நடந்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிகழ்வில் அறிஞர் சித்திலெவ்பையுடைய ஆய்வுகளில் நல்லதுவிடயம், கெட்டவிடயம் ஆய்வு செய்யவேண்டிய விடயங்கள், மற்றும் அறிஞர் சித்திலெவ்வை எனும் ஆய்வு இடைவெளி பற்றிய இன்னும் எவ்வளவு இருக்கிறது. ஆகவே எமது தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் இருப்பைக் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக்கு கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் நூலக உயர் அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.