திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்திற்குறிய கணனி வள நிலையம் மேம்படுத்தப்பட்டு திறந்து வைப்பு

(ஹஸ்பர்)

திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்திற்குறிய கணனி வள நிலையம் information teacnology distance learning hub ஆக வசதிகள் மேம்படுத்தப்பட்டு இன்று (09) கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச். ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக்கவினால் மீள திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். சிறிதரன் உட்பட அதிகாரிகள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதற்காக 3.51 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

உயர்தரம் எழுதிய மாணவர்கள், பாடசாலைக்கல்வியை இடையிலே கைவிட்ட மாணவர்கள், இளைஞர் யுவதிகள், அரச உத்தியோகத்தரகள் போன்றோரிற்கான தகவல் தொழிநுட்பம் மற்றும் மொழித்துறைசார் பாடநெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.