மானிய கொடுப்பனவு வழங்கிவைப்பு

(ஏ.ஆர். எம். றிபாஸ்)

தென்னை பயிர் செய்கை சபையினால் வருடா வருடம் நடாத்தும் 2021 ஆண்டுக்கான மானிய கொடுப்பனவு நிகழ்வு திருகோணமலை மொறவெவ தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.அஸ்வர் தலைமையில் இன்று( 09) புதன்கிழமை 10:30 மணி அளவில் மொரவெவ கமநல சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பதவிசிறிபுர,மொரவெவ,கோமரன்கடவல பிரதேச செயலக பிரிவிலுள்ள கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 45 தென்னை பயனாளிகளுக்கு மானிய கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் ,விவசாய போதனாசிரியர் ,தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்,தென்னை பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.