மகிழூரில் பிரதேச சபையினால் கலாசார மண்டபத்துக்கு அடிக்கல் நடப்பட்டது.

 

(எருவில் துசி) போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு ஞா.யோகநாதன் அவர்களின் தலைமையில் இன்று (09) காலை 11.00 மணிக்கு மகிழூர் பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.

UNDP   யின் உள்ளூர் அபிவிருத்தி உதவி செயல்த்திட்டத்தின் (LDSP)   கீழ் இரண்டு கோடி முற்பது இலட்சம் ரூபா செலவில் கலசார மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.

நிகழ்வில் சபையின் செயலாளர் சா.அறிவழகன் மற்றும் மகிழூர் வட்டடார பிரதிநிதி க.உத்தமன் மற்றும் சபையின் ஏனைய உறுப்பினர்கள் மகிழூர் சரஸ்வதி வித்தியாலய அதிபர், உத்தியோகத்த்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.