விமலுக்கும் கம்மன்பிலவிற்கும் பின்வரிசை ஆசனம் : நாடாளுமன்ற ஆசன அமைப்பில் மாற்றம்!

விமல் வீரவங்ச மற்றும் அமைச்சர்  கம்உதயமன்பில ஆகியோர் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற ஆசன அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆளும் கட்சியில் விமல் வீரவன்சவுக்கு 73ஆவது பின்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 78 ஆவது பின்வரிசை ஆசனம் உதய கம்மன்பிலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு முன் வரிசையில் இரண்டாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போக்குவரத்து அமைச்சுப்பதவிக்கு நியமிக்கப்பட்ட திலும் அமுனுகமவிற்கு ஆளுங்கட்சியின் 30ஆவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் மீண்டும் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட அருந்திக பெர்னாண்டோவுக்கு 36ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்கள் மீதான விவாதத்திற்காக நாடாளுமன்றம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கூடுகின்றது.