திருமலையில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் பல இலட்சம் பொருட்கள் நாசம்

(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்ததில் பல இலட்சம் பெறுமதியான பல பொருட்கள் தீயில் கருகி நாசம் அடைந்துள்ளதாக உப்புவெளி போலீசார் தெரிவித்தனர்.

திருகோணமலை ஆண்டாங்குளம் குளக்கட்டு வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (03) நண்பகல் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இவ்வாறு தீப்பற்றிய வீட்டில் 3 மோட்டார் சைக்கிள்களும் ஒரு குளிர்சாதன பெட்டி உட்பட 300 லிட்டருக்கும் அதிகமாக சேமித்து வைக்கப்பட்ட பெட்ரோல் கொள்கலன் உட்பட வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு தீப்பற்றிய வீடு தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்ட வீடு எனவும் தீப்பற்றிய மைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் திருகோணமலை நகராட்சி மன்ற தீயணைப்பு படையினரின் முயற்சியில் தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தீப்பரவல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது