சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற “ஈஸ்வரா நாட்டியாஞ்சலி 2022″

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக நடன, நாடகத்துறை மற்றும் இந்துமா மன்றம் இணைந்து சிவராத்திரியை முன்னிட்டு பெருமையுடன் வழங்கிய “ஈஸ்வரா நாட்டியாஞ்சலி 2022″ நிகழ்வானது,  (01) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோரன்ஸ் திருமதி.பாரதி கெனடி அவர்கள் விசேட அதிதியாகவும் மட்டக்களப்பு சைவ மங்கையர் கழக தலைவியும் ஓய்வு நிலை அதிபருமான திலகவதி ஹரிதாஸ் அவர்களும் கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஓய்வு நிலை விரிவுரையாளர்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் எனப் பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் “ஈஸ்வரா நாட்டியாஞ்சலி 2022″ நிகழ்வின் பிரதான அரங்க ஆற்றுகை நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழக நடன, நாடகத்துறை மாணவர்களின் நடன மற்றும் நாடக ஆற்றுகைகள் அரங்கை அலங்கரித்திருந்தது. அதிதிகளின் விசேட உரையினைத் தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உள்ளிட்ட சிறப்பு, விசேட மற்றும் கௌரவ அதிதிகள் அனைவரையும் விழா ஏற்பாட்டுக்குழுவினர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவம் வழங்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.