மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானம்!

நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.