கிண்ணியாவின் புதிய பிரதேச செயலாளராக மீண்டும் எம்.எச்.எம்.கனி நியமனம்!

(ஹஸ்பர்)

கிண்ணியாவின் புதிய பிரதேச செயலாளராக மீண்டும் எம்.எச்.எம்.கனி நியமனம்…!!! கடமைகளை பொறுப்பேற்றார், பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் வெருகல் செயலாளராக கடமை பொறுப்பேற்பு

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமை
புரிந்த இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த எம்.எச்.எம்.கனி அவர்கள் 27.07.2021ம் திகதி திடிரென வெருகல் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப்பட்டு சுமார் 7 மாதங்களாக கடமை செய்த நிலையில் மீண்டும் 26.02.2022ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கிண்ணியா பிரதேச செயலாளராக இன்று (28) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னர் கிண்ணியா பிரதேச செயலாளராக கடமையாற்றிய இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த எம்.ஏ.அனஸ் வெருகல் பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று (28) கடமைகளை பொறுப்பேற்றார். எம்.ஏ.அனஸ் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,கிண்ணியா பிரதேச செயலகத்தில் இரு தடவைகள் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.