அந்தி பூத்த வைகறை கவிதை நூல் வெளியீட்டு விழா

(எம்.ஏ.றமீஸ்)

ஒலுவில் எஸ்.ஜலால்டீன் எழுதிய ‘அந்தி பூத்த வைகறை’ கவிதை நூல் வெளியீட்டு விழா அட்டாளைச்சேனை அல்-ஷகி வரவேற்பு மண்டபத்தில் நேற்று(27) இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கவிதை நூலினை வெளியீட்டு வைத்தார்.
இந்நிகழ்வின்போது இலக்கிவாதிகள், நிருவாக சேவை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

செய்னம்பு ஹூசைமா வெளியீட்டகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இக்கவிதை நூல் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிரபல இலக்கியவாதிகள், பல்துறை விற்பன்னர்கள் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன் போது விழா தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் கலைஞர் ஏ.எல்.அன்ஸார் சிறப்புரை நிகழ்த்தியதுடன், நூல் மீதான உரையினை இலக்கிய ஆய்வாளர் எம்.அப்துல் றஸாக், விமர்சகர் சிறாஜ் மசூர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை தலைவர் கலாநிதி எஸ்.எம்.ஐயூப் உள்ளிட்ட இலக்கியவாதிகளால் நிகழ்த்தியதோடு கலை கலாசார நிகழ்வுகளும் இந்நிகழ்வில் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.