மருத்துவ பீடத்துக்கு தெரிவான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிக்கு பாராட்டி கௌரவிப்பு

( அஸ்ஹர் இப்றாஹிம் )

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் மட்டக்களப்பு மருத்துவ பீடத்துக்கு ஆண்டு 2020/2021 இல் தெரிவான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸனூஸ் பாத்திமா நூஹா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

.வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள்  மற்றும்  ஊழியர்களின் பிள்ளைகள் சிறந்த அடைவு மட்டத்தை அடையும் போது அவர்களை கெளரவித்தல் திட்டத்தின்  கீழ்  முதல் தடவையாக இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டாக்டர் ஜீவா சிவசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மாணவியின் பெற்றோர் , வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள்  மற்றும்  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலை  தாதிய பரிபாலகர் பீ.எம்.நஸீறுதீன் இந்நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்.