திருகோணமலை மறைமாவட்ட ஆயருடன் கலையரசன் சந்திப்பு

(சுமன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் கிறிஸ்டின் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய திருகோணமலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், சமூக செயற்பாட்டாளர் பிரதீபன் மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள், தற்போது நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.