ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் நூறு வருடகால பூர்த்தி விழா

(ஏறாவூர் நிருபர் நாஸர்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் நூறு வருடகால பூர்த்தியையொட்டிய விழா நிகழ்வுகள் 24.02.2022 ஆரம்பமாயின.

1922 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி இப்பாடசாலை கனிஷ்ட பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளை வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் செய்யித் உமர் மௌலானா பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு ஆரம்பம் செய்தார்.

பாடசாலையின் அதிபர் எஸ்எம்.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்வித்திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நூற்றாண்டு விழா தொடர்பான பதாதைகள் திறக்கப்பட்டதுடன் மாணவர்களது கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
அண்மைக்காலமாக கல்வி மற்றும் புறக்கிருத்தி செயற்பாடுகளில் இப்பாடசாலை பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளதாக இங்கு உரையாற்றிய பிரமுகர்கள் குறிப்பிட்டனர்.

ஏறாவூரின் பல அரசியல் பிரமுகர்களும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

விழாவையொட்டி பாடசாலை வளாகம் விழாக்கொலம் பூண்டிருந்தது.