2025 ஆம் ஆண்டில் நாட்டில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் : வாசுதேவ நாணயக்கார

(ரவ்பீக் பாயிஸ்)

2025ம் ஆண்டில் நாட்டில் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவோம் நீர்வழங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக திருகோணமலை நகரத்தில் குடிநீர் சீராக வழங்கப்படாமை தொடர்பிலும் மாதத்திற்கு ஒரு முறை தம்பலகாமம் தொடக்கம் முள்ளிப்பொத்தானை வரையான பகுதிகளில் உள்ள பிரதான நீர்க்குளாயில் வெடிப்பு ஏற்படுவதன் காரணமாக நகருக்கான நீர் வளங்கலானது சீராக வழங்கப்படாமை குறித்தும் இக்கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

நகரத்தில் நீருக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் அதனை பூர்த்தி செய்வதற்காக நீரின் வேகத்தினை அதிகரிக்க வேண்டியிருப்பதுடன் அவ்வாறு அதிகரிக்கும்பட்சத்தில் பழைய நீர்க்குளாய்களில் வெடிப்புக்கள் ஏற்படுகிறது. இதற்கான மாற்றீடாக புதிய நீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதில் நீர் வினயோகம் எதிர்வரும் மாதத்திலிருந்து வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இது தொடர்பில் தெளிவாக கேட்டு அறிந்துகொண்ட அமைச்சர் அவர்கள் எதிர்வரும் 2024ம் ஆண்டுக்குள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்ததுடன் நாளாந்தம் சீரான நீர் வினியோகத்தினை வழங்க முடியுமெனவும் அமைச்சர் உறுதியளித்தார்.