காதலின் ஆறுவகைநிலை -இணையவழி பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு

(காரைதீவு சகா)

ஜேர்மன் தமிழ்வான்அலை நடாத்தும் ‘காதலின் ஆறு வகை நிலை’ எனும் தலைப்பில் இணையவழி பன்னாட்டு இலக்கியச்சந்திப்பு எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.

இவ் இணையவழி பன்னாட்டு இலக்கியச்சந்திப்பு இலங்கை இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு நடைபெறும்.

‘காதலின் ஆறு வகை நிலை’ இலக்கியச்சந்திப்பில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து , பிரான்ஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த ஆறு கவிஞர்கள் பங்குபற்றுகின்றனர். இலங்கை சார்பில் மட்டக்களப்பு பெரியநீலாவணையைச் சேர்ந்த கவிஞர் நீலாவணை இந்திரா பங்குபற்றுகிறார்.

நிகழ்வில், அமீரகம் தேஜஸ்வினி ஸ்ரீராமுனுவின் நடன நிகழ்ச்சி இடம்பெறவிருக்கிறது.